|
|
புதுக்கோட்டை மாவட்டம்
மாவட்ட வரலாறு:
புதுக்கோட்டை என்பது புதியக் கோட்டை எனப் பொருள்படும். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டைமான் ரகுநாதா என்பவரால் ஒரு புதிய கோட்டை கட்டப்பட்டு, புதுக்கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டம் பரப்பளவில் சிறிது என்றாலும், வரலாறு, சிற்பம், ஓவியம், ஏனைய கலைகள் மற்றும் கனிம வளம் போன்ற சிறப்புக்களால் பெருமைப் பெற்ற மாவட்டமாகத் திகழ்கிறது. இம்மாவட்டம் பல்லவர், பாண்டியவர், ஹேர், சோபூர், முத்தரையர், ஹொய்சளர், முஸ்லீம்கள், விஜயநகர அரசு, நாயக்கர்கள்,மராத்தியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் படையெடுக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, அவர்களின் கலை கலாச்சாரங்களால் தாக்கம் பெற்றது. சுதந்திரத்திற்கு முன்பு தொண்டைமான்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 1974 ஜனவரி 1ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
எல்லைகள் :கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் தஞ்சை மாவட்டமும்; மேற்கிலும் வடக்கிலும் திருச்சி மாவட்டமும்; தெற்கில் சிவகங்கை மாவட்டமும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எல்லைகளாக உள்ளன. கடற்கரை நீளம் 36 கி.மீ.
வருவாய் நிர்வாகம்:கோட்டங்கள்-2புதுக்கோட்டை, அறந்தாங்கி
வட்டங்கள்-7கந்தர்வக் கோட்டை,
உள்ளாட்சி நிறுவனங்கள்:
|
||||||||

